கெரவலப்பிட்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அஸ்கிரிய , மல்வத்து பீடங்களுக்கு தெளிவுபடுத்தல்

By T. Saranya

28 Sep, 2021 | 10:30 AM
image

(நா.தனுஜா)

கொழும்பில் பெறுமதிவாய்ந்த 15 கட்டடத்தொகுதிகளை விற்பனைசெய்வதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படல் மற்றும் கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் இரவோடிரவாகக் கைச்சாத்திடப்பட்டிருத்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்போது நாட்டைப் பாதுகாப்பதற்காகவே அரசாங்கத்திற்குப் பொதுமக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ள மகாசங்கத்தினர், மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயற்படுவது தவறானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் மகாசங்கத்தில் கலந்துரையாடி, அதனை அரசாங்கத்திற்கு அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் இதுகுறித்து எடுத்துரைத்தனர்.

அதன்படி அஸ்கிரிபீட மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரத்ன தேரரிடம் இதுபற்றித் தெளிவுபடுத்திய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல,

தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய சொத்துக்களையும் வளங்களையும் பாதுகாப்பதாகக் கூறியல்லவா ஆட்சிபீடம் ஏறியது? இருப்பினும் தற்போது கொழும்பில் மாத்திரம் சுமார் 15 பெறுமதிவாய்ந்த கட்டடத்தொகுதிகளை விற்பனை செய்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இந்த அரசாங்கத்தை 'அரசாங்கம்' என்று கூறுவது பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில் இது சொத்து விற்பனை நிறுவனம் போன்றே செயற்பட்டுவருகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, 'நாட்டிற்கு திரவ இயற்கை எரிவாயுவின் தேவையிருப்பதனால் அந்த எரிவாயு விநியோகத்திற்கான உட்கட்டமைப்பை வசதிகளை நிர்மாணிப்பது தொடர்பில் பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் அந்த இயற்கை எரிவாயுவை இலங்கைக்கு அனுப்பிவைக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் மின்சாரசபையும் கடந்த பெப்ரவரி மாதத்தில் போட்டித்தன்மைவாய்ந்த விலைமனுக்கோரலுக்கான அறிவிப்பைச் செய்திருந்தது.

அதற்கென சில நிறுவனங்கள் நியாயமான முறையில் விண்ணப்பித்திருந்த சூழ்நிலையிலேயே 'நியூ போர்ட்ஸ் எனெர்ஜி' என்ற அமெரிக்க நிறுவனம் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் சில உறுப்பினர்களின் உதவியுடன் முறைகேடாக உள்நுழைந்திருப்பதுடன், இவ்விவகாரம் தொடர்பான ஒப்பந்தம் அந்நிறுவனத்துடன் நள்ளிரவில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது' என்று தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த வரகாகொட ஞானரத்ன தேரர்,

நாட்டைப் பாதுகாப்பதே எதிர்க்கட்சியின் நோக்கமாக இருக்கின்றது. அதுவே அரசாங்கத்தின் நோக்கமாகவும் இருக்கவேண்டும். நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். அதுவே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எனவே அதற்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின், அவை தவறானவையாகும். ஆகவே இதுகுறித்து அறிவார்ந்த அடிப்படையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கலந்துரையாடி, நாட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு செயற்படுவதே சிறந்ததாகும்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் எமது மகாசங்கத்தில் கலந்துரையாடி, அதுகுறித்து அரசாங்கத்திற்கு அறிவிப்போம் என்று உறுதியளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07