வடகொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது கிழக்கு கடற்பரப்பில் குறுகிய தூர ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளதாக தென்கொரியா இராணுவம் கூறியுள்ளது.

ஐ.நா.வில் வட கொரியாவின் தூதுவர் பியோங்யாங்கின் தற்காப்பு மற்றும் ஆயுதங்களை சோதிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று கூறி தெளிவுபடுத்தியதை அடுத்து இந்த சோதனைகள் அரங்கேறியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்தது.
எவ்வாறாயினும் இந்தோ-பசிபிக் கட்டளை, வடகொரியாவின் இந்த பரிசோதனை சட்டவிரோத ஆயுதத் திட்டத்தின் சீர்குலைக்கும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியது.