எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு துறைகளை இலக்காகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அனைத்து அமைச்சுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் நாட்டில் அன்றாடம் சுமார் 1,000 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வேளையில் 50-75 இறப்புகள் பதிவாகின்றன.

எனவே அடுத்த இரண்டு நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற முடிவை அறிவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.