(எம்.ஆர்.எம்.வசீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்குவதற்காக மாநகர சபையினால் பிரேரணை ஒன்றை அனுமதி கேட்டிருந்தபோதும் மாநகர ஆணையாளர் அதற்கு அனுமதி வழங்காமைக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாநகர ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாநகர வளாகத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்துக்கு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்துகொண்டிருந்ததுடன் மாநகரசபை சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரம்சி டோனியும் கலந்துகொண்டிருந்தார்.
நாட்டுக்குள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அவர்களுக்கு சதொச நிறுவனம் ஊடாக 4ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் அனுமதிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மாநகர ஆணையாளர் மேயரின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் கவனம் செலுத்தி நியாயமாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து மேல் மாகாண ஆளுநரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேயர் ரோசி சேனாநாயக்க குறிப்பிடுகையில்,
மாநாகர எல்லையில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டிக்கொள்ளும் மக்களாகும். ஒரு மாதத்துக்கும் அதிக காலம் பயணக்கட்டுப்பாடு இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு நாங்கள் விசேட நிதி செயற்குழுவில் கோரி இருந்தோம்.
அத்துடன் மாநகரசபை மாதாந்த அமர்விலும் அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அதனை வழங்க முடியாதவகையில் அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இதனை மேற்கொள்ள முடியாது என காரணங்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் எதுவும் சட்டபூர்வமானதல்ல என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM