நாட்டில் நேற்று  (26.9.2021) கொரோனா தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 29 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 05 ஆண்களும், 05 பெண்களுமாக 10 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 24 ஆண்களும் 17 பெண்களுமாக 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் பெருமளவானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமையே அவர்கள் உயிரிழக்க பிரதான காரணியாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதுவரையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களில் 80 சதவீதமானோர் இவ்வாறான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த இரு வாரங்களாக பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்து வருகிறது. இன்று திங்கட்கிழமை 51 கொவிட் மரணங்கள் மாத்திரமே பதிவாகின. கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ள இந்த 51 பேரில் 29 ஆண்களும் , 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 41 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12 731 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை 6 மணி வரை 715 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 514 324 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 455 344 பேர் குணமடைந்துள்ளதோடு , 46 249 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.