ஹரிகரன்

புலம்பெயர் தமிழர்களை பேசஅழைத்த ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ  ஏன் இங்குள்ளதமிழர்களுடன் பேச முனையவில்லை? அவர் ஆட்சிக்கு வந்து 22 மாதங்களில் ஒரு முறையாவதுதமிழ் அரசியல் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்கிறாரா? என்ன பிரச்சினைஉங்களுக்கு என்று கேட்டிருக்கிறாரா?

 கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் உள்ள சூழலில், ஐ.நா. பொதுச் சபைக்கூட்டத்துக்காக நியூயோர்க் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று, அமெரிக்கஇராஜாங்கத் திணைக்கத்தினால், எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும்அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை மீறி- கொரோனா அச்சுறுத்தல்களுக்கும்மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் சென்றது, அண்மையில்பிறந்த மகன்வழிப் பேர்த்தியைபார்ப்பதற்குத்தான் என்றகுற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

அதனையும் தாண்டி சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒருவழியாகவும் அவர் இந்த அமர்வைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,கிட்டத்தட்ட 22 மாதங்களை நிறைவு செய்து விட்டார். இன்னும் 38 மாதங்கள் தான் அவரால்ஆட்சியில் இருக்க முடியும்.

இந்தநிலையில், அவரது அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்தே, கொரோனாதொற்று மற்றும் அதனைச் சார்ந்த நெருக்கடிகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் தான்சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அவர் ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடியவர்களால் கூட, எந்த நன்மையையும்இதுவரை அனுபவிக்க முடியவில்லை.

அரசியல் ரீதியான வெற்றிகளையும் பெறவில்லை. பொருளாதார ரீதியானநலன்களையும் அடையவில்லை. 

கடன், சர்வதேச அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள் என்றே கோட்டாபயராஜபக்ஷவின் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.