கபில்

இந்திய அரசிடம், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து,12 ஆவது நாளில் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

வடக்கு, கிழக்கில் கடந்த ஆண்டு திலீபன் நினைவேந்தலுக்கு பொலி ஸார், ஓடி ஓடி நீதிமன்றக் கட்டளைகளைப் பெற்றிருந்தனர்.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் அந்த கட்டளை பெறப்படாத நிலையில், இதேநாளில் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, நினைவேந்தல் இடம்பெற்றது.

நீதிமன்றக் கட்டளை பெறப்படாது போயிருந்தால், நினைவேந்தலுக்கு தடைவிதிக்காதுபோயிருந்தால், எட்டியும் பார்க்காமல் இருந்திருக்க கூடிய அரசியல்வாதிகள் பலரும் அன்றுஅந்த உண்ணாவிரத்ததில் கூடியிருந்தனர்.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி திலீபன் நினைவேந்தலை தடுக்க முயன்றது அரசாங்கம்.

அரசாங்கம் தான் திலீபன் நினைவேந்தலை உந்துதலுடன் நிறைவேற்றச் செய்திருந்தது.

இந்தமுறை மட்டக்களப்பில் மட்டும் திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றக்கட்டளைகள் பெறப்பட்ட போதும், கடந்த வியாழக்கிழமை வரை, வடக்கில் அவ்வாறான கட்டளைகளைப்பெறுவதற்கு பொலிஸார் முயற்சித்திருக்கவில்லை.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உள்ள நிலையில் அந்த தடை உத்தரவு தேவையற்றது என்றுஅவர்கள் கருதியிருக்கலாம்.

அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஐ.நா பயணமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

கடந்த 15ஆம் திகதி தொடக்கம், 22ஆம் திகதி வரையான ஒரு வாரமும், நல்லூரில்உள்ள திலீபன் நினைவிடம் அமைதியாகத் தான் இருந்தது.

பொலிஸார் இருக்கவில்லை. யாரும் கூட்டமும் கூடவில்லை. தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் சில உறுப்பினர்கள், மட்டும்திலீபன் நினைவிடத்தில் திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் வணக்கம்செலுத்தி வந்தனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.