இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி

Published By: Digital Desk 3

27 Sep, 2021 | 09:43 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?

பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.

என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.

கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?

பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.

கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?

பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.

கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?

கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?

பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50