நாடளாவிய ரீதியில் சுகாதார பணியாளர்கள் இன்று முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள மற்றும் நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.
44 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(27) காலை 7 மணி முதல் ஐந்து மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த குருகே தெரிவித்துள்ளார்
அந்தவகையில், 7500.00 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை மற்றும் பல அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தருமாறு கோரி அரச சுகாதார தாதியர் தொழிற்சங்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று நண்பகல் சுமார் 44 அரச சுகாதார தாதியர் தொழிற் சங்ககங்களின் அங்கதத்வர்கள் கலந்துகொண்ட பணிப்பகிஷ்கரிப்பில் நூற்றுக்கணக்காண தாதியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தாதியர் சங்க ஏற்பாட்டாளர் ஆர்.ஏ.டி. சுமித்த ஹேமந்த மற்றும் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த குருகே ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் தமக்கு நிறுத்தப்பட்ட 7500.00 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பில் சுலோகங்களை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தமது போராட்டம் தொரரும் எனவும் சுகாதார தாதியர் தொழிற்சங்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
அவசர சிகிச்சைகளுக்கான வேலைகள் தடையின்றி இடம் பெற்றுள்ளதையும் காண முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM