சி.அ.யோதிலிங்கம்

 ஜனாதிபதி கோட்டாபய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின்போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும்உருவாக்கியுள்ளன. 

புலம்பெயர் மக்களுக்கு அழைப்புவிடுத்தமையும் காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவோம் எனக் கூறியமையும் தான் தமிழ் மக்கள் மத்தியில்பலத்த கோபத்தையும் எரிச்சல்களையும் உருவாக்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களையும்அங்குள்ள செயற்பாட்டு முக்கியஸ்தர்களையும் பகிரங்கமாகத் தடை செய்துவிட்டுத்தான் ஜனாதிபதிஇந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். 

இதன்மூலம் புலம்பெயர் மக்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை அவர் மறைமுகமாகஏற்றுக்கொண்டிருக்கிறார். புலம்பெயர் மக்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பலவழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாவர். 

முதலாவது முக்கியத்துவம் 2009இக்குப் பின்னர் அதாவது ஆயுதப் போராட்டம்மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை தக்கவைத்ததிலும் பாதுகாத்ததிலும்புலம்பெயர் மக்களுக்குரிய பங்காகும். 

அதுவும் நல்லாட்சி எனக் கூறப்படுகின்ற ரணில்-மைத்திரிஆட்சிக்காலத்தில் இவர்களது பங்கு அளப்பரியதாக இருந்தது. இக்காலத்தில் தமிழ்த் தேசியஅரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை அமெரிக்க, மேற்குலக, இந்தியக்கூட்டு நகர்த்தியிருந்தது. 

அந்த நிகழ்ச்சி நிரலை பலவீனப்படுத்தி தமிழ்த்தேசிய அரசியலின்இருப்பை பாதுகாத்ததில் புலம்பெயர் மக்களுக்கு அளப்பரிய பங்கு உண்டு.

தாயகத்தில் அதனைப் பாதுகாக்கும் செயற்பாட்டை ஆரம்பத்தில் முன்னெடுத்தவர்கள்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தான். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அதற்கானகோட்பாட்டுத் தளத்தையும், செயற்பாட்டுத் தளத்தையும் கஜேந்திரகுமார் உருவாக்கியிருந்தார். 

இதன்தொடர்ச்சியாக அதனை மக்கள் மயப்படுத்தும் பணியை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டது.நீதியரசர் விக்கினேஸ்வரனின் பங்களிப்பு இதில் வலுவானதாக இருந்தது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.