Published by T. Saranya on 2021-09-27 11:46:59
தற்போது இணையத்தின் மூலம் சனரஞ்சகமான தேடுதல் நடவடிக்கைகள் பிரபல தேடுப்பொறியான கூகுள் மூலம் நடைபறுகின்றன.
இந்நிலையில் கூகுள், தனது 23-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் கூகுள். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஒன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.
கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
கூகுள் நிறுவனம் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பியுள்ள நிலையில், இதன் மொத்த தொழில்களும் அல்பபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது.
கூகுளின் பிறந்த நாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வேலைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.