கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தெற்கு நகரமான ஜுஹாயில் சீனாவின்  விமானக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

விண்வெளியில் தன்னிறைவுக்கான சீனாவின் உந்துதலும் அதன் வளர்ந்து வரும் இராணுவ வலிமையும் இந்த வாரம் நாட்டின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 விமானப்படையின் மிக முன்னேறிய போர் விமானமான J-20 சம்பந்தப்பட்ட "திகைப்பூட்டும் விமான நிகழ்ச்சிகள்" கண்காட்சியில் இருப்பதாக அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் அறிவித்துள்ளது.

J-16D மின்னணு போர் விமானம், WZ-7 உயர ட்ரோன் விமானங்கள், WZ-8 அதி வினை திறன் மிக்க விமானங்கள் உள்ளிட்ட பிற மேம்பட்ட விமானங்களும் முதல் முறையாக வெளிப்புற கண்காட்சிக்கு வைக்கப்படும்.

உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் சீனாவின் இந்த கண்காட்சி நிகழ்ச்சி, ஆசிய பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் மூலோபாய போட்டிக்கு மத்தியில் வெளிவந்துள்ளது.