வொஷிங்டன் சந்திப்புகளும் : உலக அரசியலும்

By Gayathri

27 Sep, 2021 | 10:31 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் இடம்பெற்ற  பல சந்திப்புகள் உலக அரசியலில் பேசும் பொருளாகவுள்ளது. 

குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மையப்பத்திய குவாட் அமைப்பின் சந்திப்பு இதில் முக்கிய இடம்பெறுகின்றது. 

குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். 

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

 

இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கு உதவுவதற்காக நமது நான்கு நாடுகளும் 2004 ஆம் ஆண்டு, சுனாமிக்குப் பிறகு முதல் முறையாக சந்தித்துள்ளோம். 

இன்று, உலகம் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடும் போது, நாம் மீண்டும் மனிதகுல நலனுக்காக ஒன்றிணைந்துள்ளோம் என  பிரதமர் மோடி தெரிவித்ததுடன் குவாட் அமைப்பு தடுப்பூசி விநியோக விடயத்தில் இந்தோ - பசிபிக் நாடுகளுக்கு பெரிதும் உதவும். 

குவாட்டில் நமது பங்களிப்பு உலகில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

நான்கு ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான், கொரோனா முதல் காலநிலை வரை பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒன்றாக வந்துள்ளன.

எப்படி செயல்படுவது என்பது எமக்கு தெரியும் என வே சவால்களை வெற்றிக்கொல்லாம்  என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். 

மறுப்புறம் இந்தோ - பசிபிக் பிராந்தியம் இன்று பெரும் சவால்களைக் கொண்டுள்ளது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

குவாட் நாடுகளின் கடைசி சந்திப்பு முடிந்து 6 மாதங்களில் நிறைய சாதிக்கப்பட்டுள்ளது. பசிபிக் மண்டலத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பது வெளிப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார்.

இவ்வாறு குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் எதிர்கால இலக்குகள் குறித்து சமிக்கைகளை வெளிப்படுத்தினர்.

இதே வேளை அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் உடன்பாடு தொடர்பான  சர்ச்சைகளுக்கு மத்தியில் குவாட் நாடுகளின் தலைவர்கள் சந்தித்தமை பரந்துப்பட்ட அமைப்புகளின் ஒன்றுக்கூடலாகவும் கணிக்கப்பட்டது.

ஆக்கஸ் உடன்பாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் கையெழுத்திட்டிருந்தன. 

பாதுகாப்புத் துறைசார்  தொழில்நுட்பங்கள் மற்றும்  நீர்மூழ்கித் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இந்த உடன்பாட்டின் சிறப்பம்சம். இந்த உடன்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகள் கிடைக்கப்பெறுகின்றது. 

குவாட் மற்றும் ஆக்கஸ் இந்த இரண்டுமே சீனாவைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவை என்றும் பவிசார் அரசியல் நிபுணர்களின் கணிப்பாகின்றது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் செல்வாக்கைத் தடுப்பதற்காக இந்த கூட்டணிகளும் உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இவற்றில் பங்கேற்றிருக்கும் தலைவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீனா குறித்து எதுவும் வெளிப்படையாக குறிப்பிடுவதில்லை. மறுப்புறம்  குவாட் அமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியா மாத்திரமே சீனாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொண்டுள்ளது. 

இதனால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு குவாட் அமைப்பு ஊடாக இந்தியா எவ்வாறு  நலன் பெறும் என்பது இங்கு முக்கியமாகின்றது.

அந்த வகையில் ஆக்கஸ் மற்றும் குவாட் ஆகிய இரு உடன்பாடுகளுமே இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் நன்மையளிக்க கூடியவை என்பதே  நிபுணர்களின் கணிப்பாகின்றது.

ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது போன்ற தங்களது கூட்டு நலனுக்கு ஓர் உலகளாவிய பார்வையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு குவாட் சந்திப்பு இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கும் என்று புவிசார் அரசியல் ஆய்வாளர்களை சுட்டிக்காட்டி பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியில் சீனாவின்  முதலீடுகளால் இந்தியா அதிருப்தியில் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. எனவே இந்தியா தனது  எல்லை மற்றும் கடல் நலன்களைப் பாதுகாப்பதில் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும். இதற்கு பிரதமர் மோடியின் வாஷிங்டன் சந்திப்புகள் முக்கியமாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19
news-image

‘மிர்’ இலங்கைக்கு புதிய தலைவலி

2022-09-24 21:29:47
news-image

ஏன் இந்த அவலம் ?

2022-09-24 21:25:25
news-image

ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும்...

2022-09-24 21:23:55
news-image

குருந்தூர்மலையில் விகாரை அமைப்பு கூட்டு ஆக்கிரமிப்பின்...

2022-09-25 11:23:09