கொவிட்-19 க்கு எதிராக இலங்கையில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை 26 மில்லியனையும் கடந்துள்ளது.

அதன்படி ஜனவரி முதல் நேற்று வரையான காலப் பகுதியில் மொத்தம் 26,002,445 கொவிட்-19 தடுப்பூசி அளவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 34,188 தடுப்பூசி நிர்வாகிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 27 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 4,132 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 15,958 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 6,700 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 619 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 63 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ்  2,767 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 08 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3,914 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 11,610,686 நபர்கள் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் மொத்தம் 208 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன. இது தவிர இராணுவத்தினரால் இயக்கப்படும் நடமாடும் தடுப்பூசி நிலையங்களும் செயலில் உள்ளன.

27.09.2021 செயலிலுள்ள தடுப்பூசி நிலையங்கள்