தியாக தீபம் திலீபனுக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை அரசின் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதிகேட்டு, வவுனியாவில் 1683 நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகளினால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவேந்தல் இன்று  அனுட்டிக்கப்பட்டது.

இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.