சுபத்ரா

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா இன்னொரு போர்க்கப்பலை வழங்கத்தயாராகி வருகிறது.

2004ஆம் ஆண்டு அமெரிக்கா கொடுத்த ‘கரேஜஸ்’ என்ற போர்க்கப்பல், இலங்கைக் கடற்படையில் ‘சமுத்ர’ என்ற பெயருடன் இப்போதும் இயங்குகிறது.

அதற்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய ‘ஷேர்மன்’ என்ற போர்க்கப்பல் ‘கஜபாகு’ என்ற பெயரில்செயற்படுகிறது.

அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்தக்கப்பல்கள் மறுசீரமைக்கப்பட்டு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது போலவே, இப்போது,‘டக்ளஸ் முன்ரோ’ என்ற கப்பலை வழங்கவுள்ளது அமெரிக்கா.

17 அதிகாரிகள் உள்ளிட்ட 160 மாலுமிகள் பணியாற்றக் கூடிய, 155 மீற்றர்நீளத்தையும், 3250 தொன் எடையும் கொண்ட இந்தப் போர்க்கப்பல், 40 நாட்கள் தொடர்ந்துஆழ்கடலில் பயணித்து கண்காணிப்பை மேற்கொள்ளக் கூடியது.

49 ஆண்டுகள் அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றிய இந்தக்கப்பல், கடந்த ஏப்ரல் மாதமே சேவையில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தக் கப்பலை இலங்கை கடற்படைக்கு வழங்கும் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. 

கடந்தவாரம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, அமெரிக்க கடலோரக் காவல்படையின் தளபதி அட்மிரல்,கார்ல் சூல்ட்சை சந்தித்த போது, இந்த கப்பல் கிடைப்பதை மீள உறுதி செய்திருக்கிறார்.அதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.