என்.கண்ணன்

தமிழ்த் தேசியத்தை வைத்து அரசியல் நடத்துவோர், ஒருவரைஒருவர் வீழ்த்துவதிலும். துரோகப்பட்டம் சூட்டுவதிலுமே குறியாக இருக்கின்றனர். அதன் எதிரொலியே வல்வெட்டித்துறை நகரசபையின் வீழ்ச்சி.

 தமிழ்த் தேசியகத்தின் பெயரால் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தரப்புகளேதமிழ்த் தேசியத்தை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு ஆகப் பிந்திய உதாரணம், வல்வெட்டித்துறை  நகரசபை விவகாரம்.

17 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில், 7 உறுப்பினர்களைபெற்றிருந்தது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது ரெலோவுக்காக ஒதுக்கப்பட்ட சபை.

தவிசாளராக இருந்த கருணானந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில்,கடந்தவாரம் நடந்த தவிசாளர் தெரிவில் ரெலோவினால் முன்நிறுத்தப்பட்ட சதீஸ் தோற்கடிக்கப்பட்டு,சுயேட்சைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய செல்வேந்திரா தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

சுயேட்சைக் குழுவுக்கு 4 ஆசனங்கள் தான் உள்ளன. கூட்டமைப்பின் அதாவது ரெலோவின்அதிருப்தி உறுப்பினரான, பிரதி தவிசாளரும், ஈ.பி.டி.பி.யை சேர்ந்த இருவரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒருவரும்,ஆதரவளிக்க 9 வாக்குகளை பெற்று செல்வேந்திரா வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் 2 உறுப்பினர்களும்,  மட்டும் வாக்களித்ததால், 8 வாக்குகளுடன் சதீஸ் தோல்வியடைந்திருக்கிறார்.

இந்த நிகழ்வை மையப்படுத்தி சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கள்தமிழ்த் தேசியமும், தமிழர் ஒற்றுமையும் எந்தளவுக்கு கீழ்த்தரமாக பந்தாடப்படுகிறது என்பதைபுலப்படுத்துவதாக உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.