பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது ஆளும் தரப்பின் பங்காளிகளுக்கும் அவருக்கும்ஏற்பட்ட முட்டிமோதல்கள் எரிபொருட்களின் விலையேற்றம் வரையில் தொடர்ந்திருந்தது. 

பின்னர்அந்நிலைமை சற்றே தணிந்திருந்தாலும் தற்போது பூதாகரமாகி இருக்கின்றது. இந்த முறை கெரவலப்பிட்டிய  மின்நிலையத்தினால் ஆளும் கட்சியான பொதுஜனபெரமுனவிற்கும்பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாக வெளிப்பட்டாலும் உண்மையிலேயேபஷில் ராஜபக்ஷவுக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் தான் மோதல்கள் காணப்படுகின்றன.இது தற்போது அப்பட்டமாக வெளியாகியிருக்கின்றது.

கெரவலப்பிட்டிய  மின்நிலையத்தின் திறைசேரிக்குச் சொந்தமான 40சதவீதமானபங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் ஒப்பந்தம் நள்ளிரவில் கைச்சாத்திடப்பட்டதுஎன்பதை முதலில் வெளிப்படுத்தியவர் வழக்கம்போலவே ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திசாநாயக்கதான். 

இதனையடுத்துஇந்த விடயம் சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆளும் தரப்பின்பங்காளிக்கட்சிகள் தமக்குள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள்நடைபெற்றிருக்கின்றன. 

அதில்,நாட்டின் வளங்கள் வெளியாருக்கு விற்பனை செய்வதை கடுமையாக எதிர்ப்பதென்றும், தொடர்ச்சியானஅழுத்தங்களைப் பிரயோகிப்பது என்றும் ஏகோபித்த முடிவுக்கு வந்தன. குறிப்பாக அமெரிக்காபோன்ற வல்லரசு நாடுகளுக்கு நாட்டின் வளங்கள் விற்பனை செய்வதை முழுமையாக நிராகரிப்பதென்றும்பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அதேநேரத்தில்இந்தக் கலந்துரையாடலின் ஓருங்கமாக அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துதனித்துச் செயற்படுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. 

எனினும்,தற்போதைய சூழலில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செல்வாக்கு முழுமையாக சரியாத காரணத்தினால்அவ்விதமாக தனித்துச் செயற்படுவது பொருத்தமற்றது என்ற வகையில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.