அரசின் மூன்று தோல்விகள்

By Digital Desk 2

26 Sep, 2021 | 06:06 PM
image

கார்வண்ணன்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் குறிப்பாககொரோனாவுக்குப் பின்னர், மூன்று முக்கியமான நுகர்வுப் பொருட்கள் தொடர்பாக எடுத்தமுடிவுகள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

பால்மா, மஞ்சள், எரிவாயு ஆகியவையே அவை. பால்மா இறக்குமதியாளர்களுடன் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷகலந்துரையாடி, ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை, கிலோவுக்கு 200ரூபாவினால் உயர்த்துவதற்கு அனுமதி இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு எந்தநேரத்திலும் வெளியிடப்படலாம்.

இதன் மூலம், தற்போது 920 ரூபாவுக்கு விற்கப்படும் ஒரு கிலோபால்மாவின் விலை, 1120 ரூபாவாக, அதிகரிக்கப் போகிறது. இது நுகர்வோரின் தலையில்விழப் போகும் இடி.

பால்மா இறக்குமதியாளர்கள் சந்தையை வெறுமையாக்கிய பின்னர், அரசாங்கம்பால்மா இறக்குமதியின் மீது விதித்திருந்த 175 ரூபா இறக்குமதி வரியைநீக்கியிருந்தது. 

அது அதனால் அரசாங்கத்துக்கும் இழப்பு ஏற்பட்டது.

இலங்கையின் பால் நுகர்வில், 40 சதவீதம் மட்டும், உள்நாட்டில்உற்பத்தியாகிறது, எஞ்சிய 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு 55 பில்லியன் ரூபாவை நாடு, பால்பொருட்களின் இறக்குமதிக்காகசெலவிடுவதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் முன்னர் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், ஒரு கிலோ பால்மாவின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டவரி நீக்கப்பட்டதால் அரசாங்கத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right