சிவலிங்கம் சிவகுமாரன்

தகவல்களை  அறிவதற்கான சர்வதேச தினம் எதிர்வரும்   28 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இலங்கையில் தகவல்களை அறிவதற்கான    உரிமை சட்டமானது  19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்  2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம்திகதி பாராளுமன்றில் கொண்டு வரப்பட்டது. 

பின்பு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இது சபாநாயகரின்ஒப்புதலோடு சட்டமாகியது. மேற்படி சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ், குறித்த சட்டத்தின்செயற்பாட்டை கண்காணிக்கும் மற்றும் அமுல்படுத்தும் பிரதான நிறுவனமாக ஆணைக்குழுவும்ஸ்தாபிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சபையின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால்நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், 4 உறுப்பினர்களையும் இந்த ஆணைக்குழுவானது அங்கத்தவர்களாககொண்டுள்ளது. 

இந்த ஆணைக்குழுவிற்கு 

1) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

2) ஊடக நிறுவனங்கள், மற்றும் 

3) ஏனைய சிவில் சமூக நிறுவனங்கள் (பிரிவுகள் 12(1))ஆகியவற்றல் சிபாரிசு செய்யப்பட்ட தலா ஒருவரையும் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபைகடமைப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிலிருந்து தனது பணிகளை முன்னெடுத்த ஆணைக்குழுவானதுதனிநபர்கள், பொது அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறும்மேன் முறையீட்டை பரிசீலித்து அவை பொதுநலன் தொடர்புடையதா என்பதை சட்டரீதியாக ஆராய்ந்து,உரிய விசாரணைகளின் பின்னர் விண்ணப்பங்களுக்கான பதில்களை வழங்கும்படி பொது அதிகார சபைகளுக்குஆணையை பிறப்பிக்கும். 

தற்போதையஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மன்பில விளங்குகிறார். உறுப்பினர்களாகவும் ஆணையாளர்களாகவும்பி.ஆர்.வல்கம,  கிஷாலி பிண்டோ, எஸ்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோர்விளங்குகின்றனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.