பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் பாகிஸ்தானின் பயீ கஹன் கிராமத்தில் தொழுகை நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் “அல்லாஹு அக்பர்” என்று சத்தமிட்டவாறு தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டள்ளது. 

இந்நிலையில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.