அமெரிக்க நிறுவனத்துடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து - நிதி அமைச்சு அறிவிப்பு

Published By: Gayathri

26 Sep, 2021 | 03:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கெரவலப்பிட்டி  மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான தொழினுட்ப மற்றும் மூல வரைபு ஒரு மாதத்திற்குள் செயற்படுத்தப்படும். 

மின்நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பங்கு பறிமாற்று ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்காவின் நிவ் போர்ட்ஷ் எனர்ஜ் நிறுவனத்தினால்  250 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

எரிவாயு விநியோகம் மற்றும் அபிவிருத்தி பணிக்கான உரிய நிதியை அமெரிக்க  நிறுவனம் வழங்கியுள்ளது. 

அமெரிக்க நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட 40 சதவீத பங்குகள் 15 வருடத்திற்கு பிறகு இலங்கை மின்சார சபைக்கு பொறுப்பாக்கப்படும். 

1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கெரவலபிடிய மின்நிலைய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து  தெளிவுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் இவ்வாரம் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24