(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய நாளை திங்கட்கிழமை முதல் களுத்துறை, அநுராதபுரம், கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுமுள்ள பிரதான வைத்தியசாலைகளிலும் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கொழும்பு - ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலை கிளை செயலாளர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துரை, ஹொரணை, பிம்புர, பேருவளை ஆகிய ஆதார வைத்தியாலைகள் மற்றும் களுத்துறை மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றிலும், அநுராதபுரத்தில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மற்றும் குருணாகலில் குருணாகல் போதனா வைத்தியசாலையும் நாளை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

...

இதேபோன்று கொழும்பில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலை, ஐ.டி.எச்., முல்லேரியா (கொழும்பு கிழக்கு) போதனா வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலை, இராணுவ, பொலிஸ், கடற்படை வைத்தியசாலை (வெலிசறை), கொத்தலாவல போதனா வைத்தியசாலை, அவிசாவளை ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் கம்பஹாவில் றாகமை போதனா வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, வத்துபிட்டிவல , மீரிகம, மினுவாங்கொட, கிரிபத்கொட ஆதார வைத்தியசாலைகளில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.