ஐயா உங்களை காணும் போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. இந்த நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று உங்கள் சேவையை செய்து வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என யாழ். மேல்நீதிமன்ற    நீதிபதி இளஞ்செழியன்,கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளார்.

 ஒரு தமிழ் அமைச்சர் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று சேவை செய்வதை முதன் முதலில் உங்களின் ஊடாக காணுகின்றேன்.

உங்கள் சேவையை கை விடாது தொடர்ந்து முன்னெடுங்கள். உங்களுக்கு இந்த நாடு பூராகவும் ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்றார்..