அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சிகாகோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக் என்ற ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிபர்ட்டி கவுண்டி ஷெரிஃப் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹெலினா நகரின் வடக்கே 150 மைல்கள் (241 கிலோமீட்டர்) மற்றும் கனடாவின் எல்லையிலிருந்து சுமார் 30 மைல்கள் (48 கிலோமீட்டர்) தொலைவிலேயே சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது ரயிலில் சுமார் 147 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தினால் மொத்தம் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை அதிகாரிகள் தெளிவாக கூறவில்லை.