மன்னாரில் கடற்படையினரின் செயலை வன்மையாக கண்டிக்கும் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்

Published By: Digital Desk 3

26 Sep, 2021 | 06:18 PM
image

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு   சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக தாக்கியுள்ள சம்பவத்தை கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு   சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர் அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது பத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர். 

இதுதொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் இவ் அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது. இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இத்தாக்குதல் சம்பவத்திற்கு எனது  வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01