புகையிரத சேவையை ஆரம்பிக்க ஆலோசனை

Published By: Digital Desk 3

26 Sep, 2021 | 06:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பயணிகள் புகையிரத போக்குவரத்து  சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க புகையிரத சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்  தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக பயணிகள் புகையிரத சேவை முடக்கடப்பட்டதால் புகையிரத திணைக்களத்திற்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டன் பின்னர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய  புகையிரத போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மின்சார புகையிரத சேவையை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை  தொடக்கம் அம்பேபுஸ்ஸ வரையில் நிலக்கரி புகையிர சேவையை சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19