அனுராதபுரம் - கல்கமுவ, கட்டுகம்பொலகம பகுதியில் வயலுக்கு தீ வைத்த வயோதிபப் பெண்ணொருவர் குறித்த தீ பரவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 67 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அறுவடை செய்த வயலை மீள பயிரிடும் நடவடிக்கைக்காக தீ பற்றவைக்கும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த பெண் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.