நாட்டில் நேற்று (24.9.2021) கொரோனா தொற்றால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,609  ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 41 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 57 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இதேபோன்று 22 பேர் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களாவர்.