பால்மா, கோதுமை மா, சீமெந்தின் விலையை அதிகரிக்க முடியும் - அறிவிக்கப்பட்டது உரிய தரப்புக்கு

25 Sep, 2021 | 04:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 200 ரூபாவினாலும்,  கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவினாலும் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய  அதிகரிக்க முடியும் என நுகர்வோர் அதிகாரசபை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு  அறிவுறுத்தியுள்ளது.

இத்தீர்மானங்களை இராஜாங்க அமைச்சர் நேற்று இடம்பெற்ற  வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.  

அத்தியாவசிய பொருட்களின் விலையை  அதிகரிப்பது தொடர்பிலான யோசனை நாளை மறுநாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். 

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில்  இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உத்தியோகபூர்வமாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறான நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு 8 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் 12.5 கிலோகிராம்  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவிலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரை 114 ரூபாவிலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லாப்  நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து இதுவரையில் அவதானம் செலுத்தப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06