அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்தனர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர்

25 Sep, 2021 | 03:22 PM
image

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று (25) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இன்று காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்திருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சாணக்கியன் உட்பட முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right