(இராஜதுரை ஹஷான்)

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தோற்றுவித்தார்கள்.  

மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.  

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பு காணப்படுகிறது. மக்களின் வெறுப்பைப்பெற்று அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது இதன் காரணமாகவே மாற்று சக்தியை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை பாரிய விளைவுகளை எதிர்காலத்திற் ஏற்படுத்தும்.  

அரசியல் நோக்கங்களை கருத்திகொண்டு குறைகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என  அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.