நாட்டுப்புற இசையைப் பற்றி கருத்தரங்கு 

25 Sep, 2021 | 02:38 PM
image

நாட்டுப்புற இசையை தமிழ் இசையின் முன்னோடி எனச் சொல்லலாம். அதிகம் படிக்காத பாமர மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சம்பவத்தையும் நாட்டுப்புற பாடலில் கொண்டுவருவது மிக அருமை. 

கருத்துமிகுந்த இந்த பாடல்கள் நம்மிடையே மறைந்து வருகின்றன. நாட்டுப்புற இசையைப் பற்றி ஒரு கருத்தரங்கு வருகிற அக்டோபர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இணையவழி கலாமஞ்சரி நடத்த இருக்கின்றது. 

இதற்கு வளர்தமிழ் இயக்கம் ஆதரவளித்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழன் தன்னோடு கலை, கலாச்சாரம், மொழி ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துச் சென்றான். 

அவன் சென்ற நாடுகளில் நாட்டுப்புற இசை எப்படி தோன்றியது? எப்படி வளர்ந்தது அதன் நிலை இன்று என்ன? இவற்றைப் பற்றி இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நான்கு நாடுகளிலிருந்து நான்கு பேச்சாளர்கள் பேச இருக்கின்றனர். 

“தமிழரின் நாட்டுப்புற இசை” - பன்னாட்டு கருத்தரங்கம் என்ற இந்த கருத்தரங்கிற்கு தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் தலைமை தாங்குகிறார். 

இந்தியாவிலிருந்து முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்கள், மலேசியாவிலிருந்து முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள், இலங்கையிலிருந்து முனைவர் மௌனகுரு அவர்கள், சிங்கப்பூரிலிருந்து திருமதி. சௌந்தரநாயகி வயிரவன் ஆகியோர் இந்த கருத்தரங்கில் உரையாற்ற இருக்கின்றனர். 

தலைமையுரை

முனைவர் டாக்டர். சுப. திண்ணப்பன், சிங்கப்பூர்

மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள் முனைவர் முரசு நெடுமாறன், மலேசியா

தமிழக நாட்டுப்புற இசை - மூலக் கூறுகளும் பரிமாணங்களும் முனைவர் அரிமளம் பத்மநாபன், இந்தியா

இலங்கைத் தமிழர் நாட்டுப் புற இசை - ஊற்றுகளும்  ஓட்டங்களும் முனைவர் மௌனகுரு, இலங்கை

சிங்கப்பூரில் நாட்டுப்புற இசையின் இப்போதைய நாட்டம் திருமதி. சௌந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேகாலை புனித மரியாள் தேவாலய 170...

2022-09-26 16:16:02
news-image

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது...

2022-09-26 18:53:07
news-image

தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

2022-09-24 21:24:26
news-image

வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி...

2022-09-23 12:53:39
news-image

Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு...

2022-09-20 22:22:19
news-image

இலங்கையில் “நந்தவனம்” அறிமுகம்

2022-09-19 16:29:40
news-image

சென் மேரிஸ் கலவன் பாடசாலைக்கு கழிவறைகளை...

2022-09-18 21:31:46
news-image

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான...

2022-09-16 21:47:10
news-image

ஐரோப்பிய மொழிகள் தினம் : நாடளாவிய...

2022-09-15 11:06:45
news-image

கொழும்பு செங்குந்தர் முன்னேற்ற சபை வருடாந்த...

2022-09-13 12:51:59
news-image

எப்பல் இன்டநஷ்னல் கொலேஜின் வருடாந்த பட்டமளிப்பு...

2022-09-12 20:15:35
news-image

எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் உருவச்சிலை திரைநீக்கம்

2022-09-12 17:23:06