(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற 'ஓல் ஜெப்பான் சீனியர் அண்ட் மாஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்'  போட்டித் தொடரின் அணிகளுக்கிடையிலான  போட்டியில் இலங்கையின் மில்கா கிஹானி டி சில்வா பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அணி தங்கப் பதக்கம் வென்றது.

May be an image of 6 people, people standing and indoor

மேலும் 5 வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டியில்  இலங்கையில் மில்கா பங்கேற்றிருந்தார். 

தமக்கு கிடைத்த புலமைப்பரிசில் ஒன்றின் அடிப்படையில் ஜப்பானில் தங்கியிருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் மில்கா, இம்முறை நடைபெற்ற டோகியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார். 

May be an image of 2 people and people standing

இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதலாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 

மேலும், 2019 உலக ஜிம்னாஸ்டிக் வல்லவர் போட்டியிலும் மில்கா இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person, standing and indoor