சர்வதேச வலைப்பந்தாட்ட தர வரிசையில் இலங்கை 18 ஆவது இடத்தில்

25 Sep, 2021 | 02:07 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனம் அண்மையில் வெளியிட்டுள்ள சர்வதேச தர வரிசையின்படி இலங்கை வலைப்பந்தாட்ட அணி  18 ஆவது இடத்தையும் ஆசிய மட்டத்தில் முதல் இடத்தையும் வகிக்கின்றமை விசேட அம்சமாகும்.

சர்வசே தரப்படுத்தலுக்கு அமைவாக அவுஸ்தி‍ரேலியா 199 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

187 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து இரண்டாவது இடத்தை வகிப்பதுடன், 175 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. 

59 புள்ளிகளை எடுத்து முதலிடத்தை கொண்டுள்ள இலங்‍கை  ஆசிய மட்டத்தில் முதலிடத்தை வகிக்கிறது. 

ஆசிய மட்டத்தில் இலங்கைக்கு அடுத்தபடியாக உள்ள  மலேஷியா 26 ஆவது இடத்திலும்,சிங்கப்பூர் 30 ஆவது இடத்திலும், ஹொங்கொங் 33 ஆவது இடத்திலும், தாய்லாந்து 43 ஆவது இடத்திலும் உள்ளன.

சர்வதேச வலைப்பந்தாட்ட தரவரிசையின்படி அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஜமைக்கா, தென் ஆபிரிக்கா, மலாவி, உகண்டா, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், ட்ரினிடாட் அண்ட் டொபேக்கோ, வட அயர்லாந்து, ஸிம்பாப்வே,பார்படோஸ், குக் தீவுகள், ஸெம்பியா,சமாவோ, பிஜி, இலங்கை, டொங்கா, சென். லூசியா ஆகிய நாடுகள் முதல் 20 நாடுகள் வரிசையில் உள்ளன.

இதில் இலங்கை மாத்திரமே முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் ஒரேயொரு ஆசிய நாடாகவுள்ளமை சிறப்பம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right