(எம்.எம்.சில்வெஸ்டர்)
தற்போது சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் கால்பந்தாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை கால்பந்தாட்ட குழுவின் தெற்காசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கால்பந்தாட்ட குழாம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கிறது.
மாலைத்தீவின் மாலே நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டியில் போட்டி ஏற்பாடு நாடான மாலைத்தீவு, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.
இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை மாலே நகரிலுள்ள தேசிய கால்பந்தாட்ட அரங்கத்தில் (கலொல்ஹு) நடைபெறவுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை 205 ஆவது இடத்தை வகிக்கிறது.
தரவரிசையில் இந்தியா 107 ஆவது இடத்தையும், மாலைத்தீவு 158 ஆவது இடத்தையும், நேபாளம் 168 ஆவது இடத்தையும், பங்களாதேஷ் 189 ஆவது இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM