மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தயாகம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகள் நடத்துவதற்கான செலவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். நிலையங்களில் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த சலுகையினை தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டில் உள்ளன.
பொதுவாக ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். சோதனை முடிவுகள் சுமார் 2 - 3 மணித்தியாலங்களுக்குள் வெளியாகும்.
இதன்போது எவருக்கேனும் தொற்று உறுதியானால், உரிய பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM