தென்கொரியாவில் அன்றாடம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சனியன்று முதல் முறையாக 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

Commuters wearing masks to avoid contracting the coronavirus disease (COVID-19) walk on a zebra crossing in Seoul, South Korea, September 24, 2021.  REUTERS/Kim Hong-Ji

சூசோக் விடுமுறையின் மூன்று நாள் கொண்டாட்டங்களின் பின்னர் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் தொற்றாளர்கள் உட்பட மொத்தமாக 3,273 கொரோனா தொற்றாளர்கள் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் தென்கொரியாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 298,402 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு தனது முதல் கொவிட் -19 தொற்றை பதிவு செய்ததிலிருந்து, ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.