(எம்.எம்.சில்வெஸ்டர்)

18 வயதுக்குட்பட்‍டோருக்கான  4 ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டி அடுத்தாண்டு மார்ச் மாதம் குவைட்டில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இலங்கை குழாமை தெரிவு ‍செய்வதற்கான போட்டியை எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டதன் பின்னர் கொவிட் 19 சுகதார வழிமுறைகளுக்கு அமைவாக முதற்கட்ட தெரிவுகளுக்காக 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு 18 வயதுக்கு குறைந்த மெய்வல்லுநர் போட்டிகளில் திறமைபடைத்த வீர, வீராங்கனைகளை கொழும்புக்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

குவைட்டில் நடைபெறும் 4 ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டிக்கான இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம்,14 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் எதிர்பார்த்துள்ளது.