ஈராக்கின் வடக்கு மாகாணமான நினிவேயில் உள்ள துருக்கிய இராணுவ முகாம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

An Iraqi Federal Police vehicle passes through a checkpoint in Qayara, some 50 kilometers south of Mosul, Iraq, Wednesday, Oct. 26, 2016. - Sputnik International, 1920, 25.09.2021

மொசூல் நகரின் வடக்கே அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் ஜெல்கானின் முகாமே ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

முகாமுக்கு அருகில் ஐந்து ஏவுகணைகள் விழுந்தன, அவற்றில் மூன்று வெடித்துள்ளன, மற்றவை வெடிக்கவில்லை என்று பாதுகாப்பு அமைப்புக்களின் ஆதரங்களை மேற்கொள்காட்டி, ஈராக்கின் ஷஃபக் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெளிவாக கூறப்படவில்லை.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக துருக்கிய இராணுவம் வடக்கு ஈராக்கில் செயல்படுகிறது.