அனைத்து கிரிப்டோ நாணயங்களின் (டிஜிட்டல்) அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமானது என்று சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

"மெய்நிகர் நாணய வழியான பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் மற்றும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன" என்று சீன மக்கள் வங்கி தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பு மூலம் பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளைளும் சட்டவிரோதமானது என கருதப்படும். 

அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சீனாவின் பிரச்சாரமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு பிட்காயின், எத்தேரியம் மற்றும் பிற டிஜிட்டல் நாணயங்கள் நிதி அமைப்பை சீர்குலைத்துள்ளதுடன், பணமோசடி மற்றும் பிற குற்றங்களையும் கட்டுப்படுத்துகின்றது.

சீனா உலகின் மிகப்பெரிய கிரிப்டோ-நாணய சந்தைகளில் ஒன்றாகும். சீன அறிவிப்பை அடுத்து பிட்காயின் விலை 2,000 அமெரிக்க டொலர்களுக்கும் (£ 1,460) அதிகமாக சரிந்தது.