சங்காவின் அதிரடியில் Sachin's Blasters ஐ வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne's Warriors

19 Nov, 2015 | 11:03 AM
image

கிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் தொடரின் 2 ஆவது போட்டியில் குமார் சங்கக்கார அதிரடியில் அசத்த Sachin's Blasters ஐ 57 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne's Warriors அணி.

3 போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கடந்த 7 ஆம் திகதி நியுயோர்க்கில் இடம்பெற்றது.

 
இதில் வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி இன்று ஹூஸ்டனில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி, வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.


முதல் போட்டியைவிட இப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால், வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 21 சிக்சர்களையும் 22 பவுண்டரிகளையும் அடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ஓட்டங்களை குவித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வோர்ன்ஸ் வாரியர்ஸ் அணி சார்பாக மைக்கல் வோன் மற்றும் மெத்தியூ ஹெய்டன்  ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.  மைக்கல் வோன் 30 ஓட்டங்களையும் மெத்தியு ஹெய்டன் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மெத்யூ ஹெய்டன் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றவேளை, மெக்ராத்தின் பந்தை தடுக்க முயன்று பந்து துடுப்புமட்டையில் பட்டு விக்கெட்டில் பட்டு ஆட்டமிழந்தார். 

இதன் பின்னர் இணைந்த கலிஸ் - சங்கக்காரா ஜோடி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 7 ஓவர்களில் 91 ஓட்டங்கள் விளாசப்பட்டன. கலிஸ் 23 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ஓட்டங்களைப்பெற்று சேவாக் பந்தில் முரளியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.


சேவாக் ஒரு ஓவரில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.  குமார் சங்கக்காரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 70 ஓட்டங்களை விளாசி குளூஸ்னர் பந்தில் அக்தரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

ரிக்கி பொண்டிங் களமிறங்கி தன் பங்கிற்கு 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் , 3 சிக்சர்களுடன் 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரும் குளூஸ்னர் பந்தில் விக்கெட் காப்பாளர் மஹேல ஜயவர்தனவிடம்  பிடிகொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 108  ஓட்டங்கள் பெறப்பட்டன. இதில் சைமண்ட்ஸ் 6 பந்தில் 19 ஓட்டங்களையும் ஜெண்டி ரொட்ஸ் 8 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

263 ஓட்டங்கள் பெற்றால் என்ற வெற்றி இலக்குடன் களமிற்கிய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக சேவாக் 2 சிக்சர்களுடன் 16 ஓட்டங்களை எடுத்த நிலையில் அஜித் அகார்கர் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். சச்சின் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ஓட்டங்களை விளாசி, சக்லைன் முஷ்டாக் வீசிய தூஸ்ராவில் சிக்கி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

கங்குலி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து ஆரவாரம் காட்டினார் . இறுதியில் 12 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்று கலிஸ் பந்தில் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ஜெயவர்தன 5 ஓட்டங்களையும் லாரா 19 ஓட்டங்களையும் குளூஸ்னர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

சைமண்ட்ஸ் மற்றும்  சக்லைன் ஆகியோர் விக்கெட் வேட்டையில் இறங்க,  சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 16 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இறுதிநேரத்தில் களமிறங்கி வானவேடிக்கை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷோன் பொலக், 1 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார். ஸ்வா 8 பந்துகளில் 22  ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். முரளிதரன் இறுதிப் பந்தை சிக்ஸர் அடித்து நிறைவு செய்தார். 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் வோர்ன் வாரியர்ஸ் அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை வசப்படுத்தியது. சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி சார்பாக 18 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் விளாசப்பட்டன. இப் போட்டியில் மொத்தம் 39 சிக்சர்களும் 32 பவுண்டரிகளும் விளாசப்பட்டன. இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சங்கக்காரா தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31