இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும்  19 வயதிற்குட்பட்டோருக்கான அணி ஆகியவற்றுக்கு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு - 20 ஆண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது முதலாவது சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். தொடர் இடம்பெற்றுவரும் நிலையில், மஹேல ஜயவர்தன தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஓமானில் இடம்பெறவுள்ள இருபது - 20 உலக்கிண்ணப் போட்டியின் முதலாம் சுற்றுப்போட்டிகளில் மாத்திரம், மஹேல ஜயவர்தன இந்த பதவியை வகிப்பார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உயிர்குமிழி முறைமைகளின் கீழ் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹேல ஜெயவர்த்தன இலங்கை கிரிக்கெட்டால் இரு முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார் அந்தவகையில் அதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் உள்ளார்.