(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியுயோர்க் நகரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட செப்டெம்பர் 11 தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நியுயோர்க் உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது இந்த தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையில் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்த நினைவு கூறல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த தாக்குதல்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஏனைய அரச தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.