சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் - கெஹலிய

By Gayathri

24 Sep, 2021 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

விசேட தேவையுடை மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி எதிர்வரும் வாரம் முதல் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் தேசிய செயற்றிட்டம்  கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றின் பாதிப்பையும், மரண வீதத்தையும் குறைக்கும் நோக்கில்  விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12 தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் எதிர்வரும் வாரம் முதல் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும்.

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான சிறுவர்கள் அதிகமாக வாழும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01