(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி  கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள  தனியார் காணி ஒன்றில்  கிணறு வெட்டும் போது ஒன்பது  ஆர்.பி.ஜி. ரக  ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த  சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றுப்  பிற்பகல்  ஆறு முப்பது மணியளவில்  கிளிநொச்சி  கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள  தனியார் காணி ஒன்றில்  கிணறு வெட்டும் பணி இடம்பெற்றது.

இதன் போது அந்தக் குழியிலிருந்து ஒன்பது ஆர்.பி.ஜி. ரக  ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.  

குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தக்காரரினால் இன்றையதினம்  காலை  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட  ஒன்பது ஆர்.பி.ஜி. ரக  ஷெல்களும்  பாவனைக்குதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன .