bestweb

உலக எடை தூக்கல் போட்டி : இலங்கையிலிருந்து 20 வீர, வீராங்கனைகள் பங்கேற்பு

Published By: Gayathri

24 Sep, 2021 | 05:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக  எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒ‍ரு போட்டித் தொடராக நடத்த உலக  எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

எனினும்,  இரண்டு போட்டிகளும் ஒருசேர நடத்தப்பட்டாலும் வெற்றியாளர்கள் வெவ்வேறாக பெயரிடப்படுவார்கள் என உலக எடைத்தூக்கல் சம்மேளனம் குறிப்பிடுகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பாக 10 வீரர்களும் 10 வீராங்கனைகளும் அடங்கலாக 20 பேர் பங்கேற்கவுள்ளனர். 

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்ஷிகா விஜயபாஸ்கர் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும். இவர் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் போட்டியிடவுள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவர்களுக்கான விசேட பயிற்சிகள் முகாம்கள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், குருணாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் பிரிவில் இசுரு குமார (55 கி.கி. எடைப்பிரிவு), திலங்க விராஜ் பலங்கசிங்க(61 கி.கி. எடைப்பிரிவு), சத்துரங்க லக்மால்(61 கி.கி. எடைப்பிரிவு), மனோஜ் மதுவன்த்த (67 கி.கி. எடைப்பிரிவு), என்டன் சுதேஷ் பீரிஸ் (73 கி.கி. எடைப்பிரிவு), இந்திக்க திசாநாயக்க (73 கி.கி. எடைப்பிரிவு),  சின்த்தன கீதால் விதானகே (81 கி.கி. எடைப்பிரிவு), ஷானக்க பீட்டர்ஸ் (96 கி.கி. எடைப்பிரிவு), சமன் அபயவர்தன (109 கி.கி. எடைக்கு மேல்), உஷான் ஷாருக்க (109 கி.கி. எடைக்கு மேல்) ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

பெண்கள் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் (45 கி.கி. எடைப்பிரிவு), ஹன்சனி தினூஷா கோமஸ் (49 கி.கி. எடைப்பிரிவு), சமரி வர்ணகுலசூரிய (55 கி.கி. எடைப்பிரிவு),நதீஷா ராஜபக்ஷ (59 கி.கி. எடைப்பிரிவு), உமெய்ரா மொஹதீன் (59 கி.கி. எடைப்பிரிவு), ஆர்ஷிகா விஜய பாஸ்கர் (64 கி.கி. எடைப்பிரிவு), ஜீ.டி. குருகம (71 கி.கி. எடைப்பிரிவு), சன்ஜனா வெதஆராச்சி (81 கி.கி. எடைப்பிரிவு),சத்துரிக்கா பிரியன்த்தி (87 கி.கி. எடைப்பிரிவு),  திமாலி ஹப்புதென்ன (87 கி.கி. எடைக்கு மேல்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் என்டன் சுதேஷ் பீரிஸ், இந்திக்க திசாநாயக்க இருவரும் 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும், திலங்க விராஜ் பலங்கசிங்க, சத்துரங்க லக்மால் இருவரும் 61 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும், நதீஷா ராஜபக்ஷ, உமெய்ரா மொஹிதீன் இவரும் 59 கிலோ கிராம் எடைக்குட்பட்ட  பிரிவிலும் ஒன்றாக பங்கேற்கவுள்ளனர்.

ஆரம்பத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டியை  சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீர, வீராங்கனைகளுக்கு போதிய பயிற்சிகள் இல்லாத காரணத்தால், இப்போட்டியை உஸ்பெகிஸ்தானில் நடத்தப்படவுள்ள உலக எடைத்தூக்கல் போட்டியுடன் சேர்த்து ஒன்றாக நடத்துவதற்கு உலக எடைத்துக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

League One கிண்ணத்தையும் 10 இலட்சம்...

2025-07-19 01:34:59
news-image

பி அடுக்கு 50 ஓவர் கிரிக்கெட்டில்...

2025-07-19 01:42:05
news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54