தனிப்பட்ட நாடுகள் மீது வெளிநாட்டுத் தீர்வுகளை திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு முரணானது - ஜி.எல்.பீரிஸ் 

Published By: Digital Desk 4

24 Sep, 2021 | 05:08 PM
image

(எம்.மனோசித்ரா)

அனுமதியின்றி தனிப்பட்ட நாடுகளின் மீது வெளிநாட்டுத் தீர்வுகளைத் திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு முரணானது என்ற கொள்கை நிலைப்பாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவளித்தமைக்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

Articles Tagged Under: ஜி.எல்.பீரிஸ் | Virakesari.lk

தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டொன் பிரமுத்வினாயுடனான மற்றும் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கையில் போதியளான சிரேஷ்ட பௌத்த பிக்குகள் இல்லாத சமயத்தில், பௌத்த பிக்குகளைப் பராமரிக்கும் முகமாக தாய்லாந்து அளித்த உதவியை அமைச்சர் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் அரசாங்கங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக மக்களுக்கிடையேயான உறவுகளையும் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் போன்ற பல சர்வதேச மற்றும் பிராந்தியக் குழுக்களில் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன.

தனிப்பட்ட நாடுகளின் மீது வெளிநாட்டுத் தீர்வுகளைத் திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு முரணானது என்ற கொள்கை நிலைப்பாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவளித்தமைக்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் அரச 'கட்டின' வில் பங்கேற்ற நினைவுகளைக் குறிப்பிட்ட தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கை பௌத்த புனிதப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தமையை நினைவூட்டியதுடன், கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் அது மீண்டும் புத்துயிர் பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.

பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கையிலிருந்து பொறுப்பேற்கவும், முயற்சிகளை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், அது சார்ந்த பொறுப்பு பெருநிறுவனத் துறை, சமூகம் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார். பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஒத்துழைப்புடன் இணைந்து அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29