மும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா 

Published By: Gayathri

24 Sep, 2021 | 11:56 AM
image

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியனன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக குயிண்டன் டி கொக் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் லோக்கி பெர்கியூஸன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ராகுல் திரிபாதி 74 ஓட்டங்களையும், அதிரடியாக வெங்கடேஷ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41