கைதிகளுக்கு ஒருவார காலம் விடுமுறை : நீதி அமைச்சர் அலிசப்ரி நடவடிக்கை

24 Sep, 2021 | 06:56 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நன் நடத்தைகளுடன் இருக்கும் கைதிகளுக்கு தங்கள்  குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருந்து மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்திருந்த நீதி அமைச்சர் அலிசப்ரி அங்கு சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெலிக்கடை சிறைச்சாலை நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினோம். 

அதேபோன்று சிறைச்சாலை கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கதைதிகளின் பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடினோம்.

மேலும் சிறந்த நன்நடத்தையுடன் இருக்கும் கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தல், புனர்வாழ்வு நடவடிக்கையை முறையாக செயற்படுத்தல், மற்றும் பொது மன்னிப்பு வழங்குதல் அனைத்து கைதிகளுக்கும் ஒரு முறைமையை ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. 

குறிப்பாக தொடர்ந்து குற்றம் செய்கின்ற மனிதர்கள் இருப்பதுபோல் வாழ்கையில் ஒரு தடவை குற்றம் செய்தவர்களும் சிறைச்சாலையில் இருக்கின்றனர். 

அந்த குற்றத்தை திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும். 

அதுதொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, இந்த பிரச்சினைக்கான தீர்வை விரைவாக பெற்றுக்கொடுக்க இருக்கின்றேன்.

அத்துடன் சிறைச்சாலையில் சிறந்த நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர், ஒருவார காலத்துக்கு அவர்களது குடும்பத்தாருடன் இருந்து வருவதற்கு அனுப்ப முடியும். 

அந்த சந்தர்ப்பத்தை உடனடியாக வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். சிறைச்சாலை சட்டத்துக்கமைய சிறந்த நன்னடத்தையுடன் இருப்பவர்களை ஒருவார காலத்துக்கு அவர்களது குடும்பத்தாருடன் இருந்து வருவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருக்கின்றது.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது. சிறந்த நன்னடத்தை செயலில் இருக்கவேண்டும். சிறந்த நன்நடத்தையும் இருப்பதை செயற்பாட்டில் ஒப்புவிக்கவேண்டும். அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44